ஏற்காடு செல்ல இ பாஸ் கட்டாயம்!

 

ஏற்காடு செல்ல இ பாஸ் கட்டாயம்!

மலைகள்,பள்ளத்தாக்குகள், அருவிகள்,காடுகள், நீர்ச்சுனைகள் என அனைத்தும் ஒருசேர அமைந்திருக்கும் இடம் ஏற்காடு. மழைக்காலங்களில் மட்டுமல்லாது மழைக்கு பிந்திய காலங்களிலும் மிக அழகாக காட்சியளிக்கும் இந்த சுற்றுலா தலத்திற்கு ஏராளாமானோர் கோடை காலத்தில் விடுமுறையைக் கழிக்க படையெடுப்பர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களையிழந்து வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யவேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தன. அதேபோல், மத்திய அரசும் இ-பாஸ் நடைமுறையை மாநில அரசுகள் ரத்து செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

ஏற்காடு செல்ல இ பாஸ் கட்டாயம்!

இந்நிலையில் இந்தநிலையில், எட்டாம் கட்ட ஊரடங்கு தொடர்பான அறிவிப்புகளை நேற்று வெளியிட்ட தமிழக அரசு மாநிலத்திற்குள்ளே பயணம் செய்ய இ பாஸ் தேவையில்லை என தெரிவித்தது. ஆனால் சுற்றுலா தலங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் கூறியது. அரசு வழிகாட்டுதலின்படி, ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ பாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்துள்ளார்.