ஏர் இந்தியா தங்க சுரங்கம் போன்றது…. நான் அமைச்சராக இல்லையென்றால் ஏர் இந்தியாவை ஏலம் கேட்டு இருப்பேன்…. பியூஸ் கோயல் தகவல்….

 

ஏர் இந்தியா தங்க சுரங்கம் போன்றது…. நான் அமைச்சராக இல்லையென்றால் ஏர் இந்தியாவை ஏலம் கேட்டு இருப்பேன்…. பியூஸ் கோயல்  தகவல்….

ஏர் இந்தியா தங்க சுரங்கம் போன்றது. நான் மத்திய அமைச்சராக இல்லையென்றால் ஏர் இந்தியாவை ஏலம் கேட்டு இருப்பேன் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியாவை எப்படியாவது தனியாருக்கு விற்று விட மத்திய அரசு துடியாய துடிக்கிறது. இந்நிலையில் ஏர் இந்தியாவை பெருமையாக பேசியுள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் மத்திய வர்ததக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டுள்ளார். அங்கு மூலோபாய பார்வை என்ற அமர்வில் பியூஸ் கோயல் பேசினார்.  

பியூஸ் கோயல்

அப்போது ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் பங்கு விற்பனை குறித்து அவர் கூறியதாவது: அரசாங்கம் ஒரு பொருளாதாரத்தை பாரம்பரியாக கொண்டு இருந்தது. அது மிகவும் பயங்கரமான வடிவத்தில் இருந்தது. பொருளாதாரத்தை மீண்டும் வடிவமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது மற்றும் அந்த ஆபரணங்களை (ஏர் இந்தியா, பாரத் பெட்ரொலியம் கார்ப்பரேஷன்) விற்பனை செய்ய பார்த்திருந்தால், அதற்கு பெரிய மதிப்பு (விலை) கிடைத்து இருக்காது.

ஏர் இந்தியா

நான் இப்போது மத்திய அமைச்சராக இல்லையென்றால் ஏர் இந்தியாவை ஏலம் கேட்டு இருப்பேன். அது உலகெங்கிலும் உள்ள சிறந்த இருதரப்புக்களை கொண்டுள்ளது. இந்த இருதரப்புகளை பயன்டுத்தி நிறைய நல்ல விமானங்களை கொண்ட நன்கு நிர்வகிக்கப்பட்ட மற்றும் திறமையான ஏர் இந்தியா தங்க சுரங்கத்துக்கு குறைவானது இல்லை என்பது என் எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.