ஏர் இந்தியாவை விற்றேத் தீருவோம்… மத்திய அமைச்சர் அடம்!

 

ஏர் இந்தியாவை விற்றேத் தீருவோம்… மத்திய அமைச்சர் அடம்!

ஏர் இந்தியா நிறுவனத்தை எவ்வளவு விரைவாக தனியாருக்கு விற்க முடியுமோ அந்த அளவுக்கு விற்பனை செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்

ஏர் இந்தியா நிறுவனத்தை எவ்வளவு விரைவாக தனியாருக்கு விற்க முடியுமோ அந்த அளவுக்கு விற்பனை செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதில் தீவிரமாக உள்ளது. லாபத்தில் இயங்கிய ரயில்வே நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தனியார் பங்களிப்பை ஊக்குவித்தது. பாதுகாப்புத் துறையில் கூட தனியாரை அனுமதித்தது. ஏர் இந்தியாவை விற்பனை செய்யத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Air india

அரசின் இந்த செயல்பாட்டுக்குத் தொழிற்சங்கங்கள், பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏர் இந்தியாவை விற்கக் கூடாது. அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஏர் இந்தியாவை விற்பனை செய்வது என்பது வெறும் கருத்து இல்லை, அதை உடனடியாக தனியார்மயமாக்க வேண்டும். எந்த ஒரு காலக்கெடுவுக்குள்ளும் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. எவ்வளவு விரைவாக அதைத் தனியார்மயமாக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதை செய்ய முயற்சித்து வருகிறோம்” என்றார்.