ஏர் இந்தியாவை முழுசா விற்கிறோம்… கொஞ்சம் கடனையும் அடைச்சுருங்க… விருப்பம் உள்ளவங்க மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அறிவிப்பு

 

ஏர் இந்தியாவை முழுசா விற்கிறோம்… கொஞ்சம் கடனையும் அடைச்சுருங்க… விருப்பம் உள்ளவங்க மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்… மத்திய அரசு அறிவிப்பு

ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளும் விற்பனை செய்யப்படும். அதேசமயம் ஏர் இந்தியாவை வாங்குபவர்கள் அதன் கடன் மற்றும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

விமான சேவையில் ஈடுபட்டு வரும்  ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது. ஆரம்ப காலத்தில் நல்ல லாபத்தில்  செயல்பட்ட ஏர் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் மத்திய அரசு ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்தது. 2018ல் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் அப்போது தனியாருக்கு விற்பனைக்கு  செய்யமுடியவில்லை. அப்போது ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை மட்டுமே விற்பனை செய்வோம் என மத்திய அரசு அடம் பிடித்தது.

ஏர் இந்தியா

இந்நிலையில் தற்போது ஏர் இந்தியாவை இன்னும் சில மாதங்களில் தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் அல்லது மூட வேண்டும் என்ற நிலைக்கு மத்திய அரசு வந்து விட்டது. மேலும் ஏர் இந்தியா விற்பனைக்கான விதிமுறையையும் தளர்த்தியது. தற்போது ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகள் விற்கப்படும் என அறிவித்துள்ளது. அதேசமயம் ஏர் இந்தியாவின் கடன் மற்றும் பொறுப்புகளில் கணிசமான பகுதியை ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. அதாவது ஏர் இந்தியாவை வாங்குபவர்கள், அநநிறுவனத்தின் கடன் மற்றும் வர்த்தகர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை என மொத்தம் ரூ.32,447 கோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியாவை வாங்க விரும்புவர்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 31ம் தேதியன்று ஏர் இந்தியாவை வாங்க தகுதி வாய்ந்த ஏலதாரர்கள் அறிவிக்கப்படுவார்கள். மத்திய அரசு திட்டமிட்டப்படி அனைத்தும் நன்றாக நடந்தால் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் ஏர் இந்தியா தனியாருக்கு கை மாறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.