ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 42% கட்டண உயர்வு…

 

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 42% கட்டண உயர்வு…

வரும் 3  ஆம் தேதி முதல் ஏர்டெல் நிறுவனம் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

ஜியோவின் வருகைக்கு பிறகு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்தன. ஜியோவின் சலுகைகளை சமாளிப்பதற்காக வோடபோனும், ஐடியாவும் இணைந்தது. இருப்பினும் ஜியோவுடன் போட்டிப்போட முடியாததால் ரூ. 74 ஆயிரம் கோடி கடனை சந்தித்த வோடபோனும் ஐடியாவும் இந்தியாவை விட்டே வெளியேற முடிவு செய்தன. மிகப்பெரிய அளவில் இருந்து வந்த ஏர்செல், டொகோமோ நிறுவனங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் மூடப்பட்டன. ஜியோ நிறுவனம் ஜியோ டூ ஜியோவுக்கு மட்டுமே இலவச கால்கள் என்றும் மற்ற கால்களுக்கு விநாடிக்கு 6 பைசா என்றும் அறிவித்தது.

airtel

இந்நிலையில் பாரதி ஏர்டெல் நிறுவனமும் செல்பேசி அழைப்பு மற்றும் இன்டர்நெட் சேவைக்காக கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. தற்போது உள்ளதை விட 42% கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் டிசம்பர் 3-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.