ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சி.பி.ஐ மனு

 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சி.பி.ஐ மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு அளிக்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உச்ச நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில்  ரூ.3,500 கோடியை முதலீடு செய்தது. அதில் முறைகேடு செய்ததால் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் நேற்று சிதம்பரத்திற்கும் கார்த்தி சிதம்பரத்திற்கும் முன் ஜாமீன் வழங்கியது டெல்லி சிபிஐ சிறப்பு நீதி மன்றம்.  

இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.