ஏரியை ஆட்டைய போட்டு காலேஜ் கட்டுறவன் இல்ல, இவர்தான் உண்மையான கல்வித்தந்தை!

 

ஏரியை ஆட்டைய போட்டு காலேஜ் கட்டுறவன் இல்ல, இவர்தான் உண்மையான கல்வித்தந்தை!

கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா போகுற பெரிய மனுசங்க என்ன பண்ணுவாங்க? பசங்க ஆடுற டான்ஸை பாத்துட்டு, “நாங்கெல்லாம் அந்த காலத்துல”ன்னு அரை மணி நேர  மொக்கையை சிறப்புரைங்குற பேர்ல போட்டுட்டு, டாட்டா காட்டிட்டு போயிடுவாங்க.

கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினரா போகுற பெரிய மனுசங்க என்ன பண்ணுவாங்க? பசங்க ஆடுற டான்ஸை பாத்துட்டு, “நாங்கெல்லாம் அந்த காலத்துல”ன்னு அரை மணி நேர  மொக்கையை சிறப்புரைங்குற பேர்ல போட்டுட்டு, டாட்டா காட்டிட்டு போயிடுவாங்க. ஆனால், அமெரிக்காவுல கல்லூரி பட்டமளிப்பு விழாவுல கலந்துகிட்ட பெரிய மனுசன் ஒருத்தர், அந்த வருட பேட்ஜ் மாணவர்கள் 400 பேரின் கல்விக்கடனை தான் அடைப்பதாக சொல்லி அதிசயிக்க வைத்திருக்கிறார்.

ஜார்ஜியா மாநிலத்தின் மோர்ஹவுஸ் கல்லூரி, கருப்பர்களுக்கு பெயர்போன கல்லூரி. அக்கல்லூரி விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டு இருந்தார், கருப்பு அமெரிக்கர்களில் மிகப்பெரிய பணக்காரரான ராபர்ட் ஸ்மித். விழாவில் பேசிய ஸ்மித், 400 மாணவர்களின் 40 மில்லியன் டாலர் கல்விக்கடனை தான் ஒருவனே அடைப்பதாக கூற, கல்லூரியே அசந்து போனது. காரணம், இந்திய மதிப்பில் தோராயமாக 400 கோடி ரூபாய்க்கும் மேல். ஒவ்வொரு மாணவரும் சராசரியாக 7 கோடி ரூபாய்க்கு மேல் தள்ளுபடி பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக்கடன் அளவு எவ்வளவு தெரியுமா? சுமார் 105 லட்சம் கோடி ரூபாய்கள். கிட்டத்தட்ட தங்கள் வாழ்நாளில் பாதி நாட்களை இந்த கடனை அடைக்கவே உழைக்க வேண்டியிருந்திருக்கும் இந்த மாணவர்களுக்கு. விழா முடிந்தவுடன் ஒரு துடுக்கு பையன் ஸ்மித்திடம் சென்று, எனக்கு அடுத்த வருஷம்தான் கிராஜுவேஷன், அடுத்த வருஷம் வருவீங்களா” என பிதாமகன் லைலா மாதிரி ஆசையாக கேட்டிருக்கிறான். வருஷா வருஷம் குடுத்தா, அப்புறம் அவர் கடனை யார் அடைப்பாங்க தம்பி?