ஏமாற்றிய உள்நாடு, கை கொடுத்த வெளிநாடுகள்…… வாகன நிறுவனங்கள் மகிழ்ச்சி…

 

ஏமாற்றிய உள்நாடு, கை கொடுத்த வெளிநாடுகள்…… வாகன நிறுவனங்கள் மகிழ்ச்சி…

2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் நம் நாட்டிலிருந்து 5.40 லட்சம் பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் சுமார் 6 சதவீதம் அதிகமாகும்.

2019ம் ஆண்டு இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இருண்ட காலமாக இருந்தது. அந்த ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் விற்பனை மிகவும் மோசமாக இருந்தது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கிய உள்ளிட்ட நடவடிக்கைகைள மேற்கொண்ட போதும் விற்பனையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் கையிருப்பு அதிகரிக்க தொடங்கியது.

ஏற்றுமதியாகும் வாகனங்கள்

இதனையடுத்து உற்பத்தி குறைப்பு, வேலையில்லா நாட்கள் அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் மேற்கொண்டன. உள்நாட்டில் வாகன விற்பனை குறைந்த போதும், வெளிநாடுகளில் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒட்டு மொத்த அளவில் 5.40 லட்சம் பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 5.89 சதவீதம் அதிகமாகும். ஹூன்டாய் நிறுவனம் அதிகளவில் பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

பயணிகள் வாகனங்கள்

டாப் 5 நிறுவனங்கள்                       ஏற்றுமதியான பயணிகள் வாகனங்கள் 
    
ஹூண்டாய்                                                1,44,982 
போர்டு இந்தியா                                        1,06,084
மாருதி                                                           75,948 
நிசான் மோட்டார் இந்தியா                      60,739
ஜெனரல் மோட்டார் இந்தியா                   54,863