ஏமாறும் சிட்டியாகும் எலெக்ட்ரானிக்ஸ்  சிட்டி -லண்டன் மாப்பிள்ளை வந்தார் -ஏழு லட்சத்தை ஏமாற்றினார் ..

ஏமாறும் சிட்டியாகும் எலெக்ட்ரானிக்ஸ்  சிட்டி -லண்டன் மாப்பிள்ளை வந்தார் -ஏழு லட்சத்தை ஏமாற்றினார் ..

ரியா என்ற 34 வயது பெங்களூரு மென் பொறியாளர்,ஜீவன்சாதி.காம் என்ற இணைய தளத்தில் தனக்கு மாப்பிள்ளை தேடிநவம்பர் 29 ம் தேதி  பதிவு செய்தார் .அப்போது தாகூர் என்ற நபர் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கௌன்டன்ட்டாக பணிபுரிவதாக கூறி அவருடன் தொடர்பு கொண்டு ,இருவரும் நீண்ட நாட்கள் சாட் பண்ணிக்கொண்டிருந்தனர் .

எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி யான பெங்களூருவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மோசடிகள் நடைபெறுகிறது.சமீபத்தில் ஒரு பெண் பொறியாளரை லண்டன் மாப்பிள்ளை என ஏமாற்றி ஆன்லைனில் 7 லட்சத்தோடு ஒருவர் ஓடிவிட்டார்.

ரியா என்ற 34 வயது பெங்களூரு மென் பொறியாளர்,ஜீவன்சாதி.காம் என்ற இணைய தளத்தில் தனக்கு மாப்பிள்ளை தேடிநவம்பர் 29 ம் தேதி  பதிவு செய்தார் .அப்போது தாகூர் என்ற நபர் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் அக்கௌன்டன்ட்டாக பணிபுரிவதாக கூறி அவருடன் தொடர்பு கொண்டு ,இருவரும் நீண்ட நாட்கள் சாட் பண்ணிக்கொண்டிருந்தனர் .

bangalore online

திடீரென தாகூர் ஒரு நாள் தான் டிசம்பர்  2019 இந்தியா வர இருப்பதாகவும் அப்போது பெங்களூருவில் அவரை சந்திக்க வருவதாகவும் கூறினார்.பிறகு டிசம்பர் 24 ன் தேதி   ரியாவுக்கு ,தாகூர் போன் செய்தார்.அப்போது அவர் தான் டெல்லி விமான நிலையத்தில் இருப்பதாகவும் ,இங்கு தான் அதிக எடையுள்ள தங்கம்,மற்றும் பொருட்கள் கொண்டு வந்ததால் உடனடியாக 50000 ரூபாய் டூட்டி போட்டுள்ளதாகவும் தன்னிடம் அவ்வளவு பணமில்லையெனவும், நீங்கள் எனது அக்கௌண்டுக்கு பணம் அனுப்பினால் நான் பிறகு தருகிறேன் என்று சொன்னார்.அதை நம்பிய ரியா பணத்தை அனுப்பினார்.பிறகு ஒரு பெண் ஏர்போர்ட் சுங்கவரி பிரிவிலிருந்து பேசுவதாக கூறி பல பரிவர்தனைகளில் 7 .75 லட்சம் ரூபாயை ரியாவிடம் தாகூருக்காக வாங்கியுள்ளார் .
பிறகு தாகூர் பெங்களூரு வருவார் என்று காத்திருந்த ரியாவுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது ,மாப்பிள்ளையும் வரவில்லை அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து 7.75 லட்சம் தான் ஏமாற்றப்பட்டதால் போலீசில் புகாரளித்துவிட்டு காத்துக்கொண்டிருக்கிறார் .