ஏப். 20ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செயல்படும்!

 

ஏப். 20ஆம் தேதி முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செயல்படும்!

கொரோனா வைரஸை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன

கொரோனா வைரஸை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக்குழு அனைத்து நீதிமன்ற பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட பட்டிருந்தது. கீழமை நீதிமன்றங்களில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. 

ttn

இந்நிலையில் ஊரடங்கால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஏப்ரல் 20ம் தேதி முதல் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். இதேபோல் ஆட்கொணர்வு மனுக்கள், முன்ஜாமின், ஜாமின் மனுக்களில் அவசரம் கருதி வழக்குகள் நீதிபதிகள் அமர்வு பி.என்.பிரகாஷ், கிருஷ்ணவள்ளி, கார்த்திகேயன், வேல்முருகன் தலைமையில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.