ஏப்ரல் 20க்குப் பிறகு ஐ.டி, வேளாண் தொழிலுக்கு அனுமதி! – மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்

ஏப்ரல் 20க்குப் பிறகு ஐ.டி, வேளாண் தொழிலுக்கு அனுமதி! – மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்

வருகிற 20ம் தேதிக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பம், ஆன்லைன் வர்த்தகம், வேளாண் உள்ளிட்ட தொழில்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

வருகிற 20ம் தேதிக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பம், ஆன்லைன் வர்த்தகம், வேளாண் உள்ளிட்ட தொழில்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

online-trading

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 20ம் தேதிக்குப் பிறகு நிபந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும் என்றும் கூறியிருந்தார். ஊரடங்குக்கான வழிகாட்டுதல்களை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டங்களில் உள்ள நிறுவனங்கள், தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

transport

மேலும், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், ஆன்லைன் வணிகம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. 
கிராமப் பகுதிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த கிராமப்புறங்களில் உள்ள உணவு தொடர்பான ஆலைகள், சாலைகள் கட்டுமானம், நீர் பாசன திட்டங்கள், கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் தொழிற்சாலை திட்டங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இதனால், கிராமப்புறத்தில் கூலித் தொழிலாளர்களுக் வேலை வாய்ப்பு கிடைக்கும்” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.