ஏபோர்ட்டுக்கு வந்து வரவேற்பார்,தாஜ்மகாலுக்கு வரமாட்டாராம் ரோஷக்கார யோகி!

 

ஏபோர்ட்டுக்கு வந்து வரவேற்பார்,தாஜ்மகாலுக்கு வரமாட்டாராம் ரோஷக்கார யோகி!

தாஜ்மகால் உள்ளூர் மக்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.தாஜ்மகால் என்பது இந்தியர்களின் ரத்தமும்,வியர்வையும்,என்பதைத் தாண்டி அதற்கு வேறு முக்கியத்துவம் இல்லை என்றவர்.ஆனால், அவரை எரிச்சலூட்டுவது போல அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாஜ்மகாலை பார்க்க வருகிறார் இன்று.

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்துக்கு தாஜ்மகாலின் மீது இருக்கும் வெறுப்பு அனைவரும் அறிந்ததே! தாஜ் மகால் பராமரிப்புக்காக ஒரு ரூபாய் கூட செலவிடமாட்டேன் என்று சொன்னவர். தாஜ்மகால் உள்ளூர் மக்களுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.தாஜ்மகால் என்பது இந்தியர்களின் ரத்தமும்,வியர்வையும்,என்பதைத் தாண்டி அதற்கு வேறு முக்கியத்துவம் இல்லை என்றவர்.ஆனால், அவரை எரிச்சலூட்டுவது போல அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாஜ்மகாலை பார்க்க வருகிறார் இன்று.

thajimahal.jpg

அதற்காக மோடியைப் போல கூடப்போக யோகி ஆதித்யநாத் தயாராக இல்லை.ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் போகும் வழியில் அங்கங்கே ‘ ராமன் பிறந்த நாட்டுக்கு வருக’ ‘அளவற்ற முதலீட்டு வாய்ப்புள்ள நிலத்துக்கு வருக’ என்று பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை உத்திரப்பிரதேச முதல்வர் என்கிற முறையில் 
ஆக்ரா விமானநிலையத்துக்கு வந்து ட்ரம்ப்பை வரவேற்கும் யோகி, அவர்களோடு ஓபராய் ஹோட்டல் வரை மட்டுமே வருவார்.அங்கிருந்து விருந்தினர்கள் தங்கள் கார்களில் இருந்து இறங்கி பேட்டரியில் இயங்கும் கோல்ஃப் கார்ட்டுகளுக்கு மாறி தாஜ்மகால் கானப் போவார்கள்.யோகி அவர்களோடு கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.