ஏன் தொப்புளில் எண்ணை வைக்கச் சொல்கிறார்கள் தெரியுமா?

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கச் சொல்கிறார்கள் தெரியுமா?

தொப்புளை நாபிக் கமலம் என்கிறார்கள். கமலம் என்றால் தாமரை. தாய் மூலமாக உருவாகும் கரு முதலில் தொப்புள் கொடி மூலமாக தான் உருவாகிறது. அதன் சுவாசம், உணவு எல்லாமே தொப்புள் கொடி மூலமாக தான். அதனால் தான் தொப்புள் கொடி உறவு என்கிறோம். இப்படி அறிவியலையும் தாண்டி நமது தொப்புள் நிச்சயமாக ஒரு ஆச்சர்யமான விஷயம் தான்.

oil

ஒருவர் இறந்த பிறகும் அவருடைய தொப்புள் சுமார் மூன்று  மணி நேரங்களுக்கு சூடாக இருக்கும் என்கிறது மருத்துவத்துறை. ஆண், பெண் எல்லோருக்குமே தொப்புளுக்கு பின்னால் உடலின் 72,000க்கும் அதிகமான நரம்புகள் இருக்கின்றன. அதனால் தான் தொப்புளில் எண்ணெய் வைக்கிறோம். இப்படி செய்து வருவதால் உடலின் உஷ்ணம் சமனாகிறது.  கண்கள் வறட்சியடைந்து விடாமல் பாதுகாக்கிறது. தொப்புளில் எண்ணெய் வைப்பதால் முழு உடலும் சரியாகி வனப்புடன் இருக்கிறது. அதிக உஷ்ணத்தாலும், பித்தத்தினாலும் தான் வெடிப்புகள் ஏற்படுகின்றன. இவை சரியாகும். முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலி போன்றவையும் இப்படி செய்வதால் நம்மை அண்டவே அண்டாது. தினமும் தூங்குவதற்கு முன்பாக இரவில் மூன்றே மூன்று சொட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய் உங்கள் தொப்புளில் வைத்து, தொப்புளைச் சுற்றிலும் மசாஜ் செய்து பாருங்கள். உங்கள் உடலின் உஷ்ணம் எந்தளவிற்கு சரியாகிறது என்று. உடல் குளிர்ச்சியாக இருப்பவர்கள் இதைத் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. சிலர் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக விளக்கெண்ணெய் வைப்பார்கள். விளக்கெண்ணெய் அதிக குளிர்ச்சியைத் தரும் என்பதால் அதைத் தவிர்த்து விட வேண்டும்.