ஏன் துளசி செடியைச் சுற்றி வருகிறோம்? அறிவியல் காரணம் இது தான்?

 

ஏன் துளசி செடியைச் சுற்றி வருகிறோம்? அறிவியல் காரணம் இது தான்?

ஆன்மிகத்தோடு அறிவியலையும் இணைத்து வைத்த மதம் இந்து மதம். நாம் செய்கிற பல ஆன்மிக செயல்களின் பின்னாலும் அறிவியலும் அடங்கியே இருக்கிறது. காலம் காலமாக குளித்து முடித்து துளசி செடியை சுற்றி வலம் வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். எதனால் இப்படிச் செய்கிறோம் என்று தெரியுமா? எத்தனையோ செடிகள் இருக்கும் போது, குறிப்பாக ஏன் துளசி செடியை வணங்கி வலம் வருகிறோம்.

tulasi

துளசி செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. கோவில் பூஜைகளிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் கோயில் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. பலரது வீடுகளில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடிக்கு விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது.  பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். முக்கியமாக துளசிச் செடி மற்ற அனைத்து செடிகளையும் விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. 
அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணிவரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இயற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும். அதே சமயம் இந்த அதிகாலை நேரத்தில் தான் காற்றில் ஓசோன் அதிகமிருக்கும்  நேரம் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். இயற்கையாகவே, காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துளசிச் செடியைச் சுற்றி வந்தால் பரிசுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம். 

tulasi

மருத்துவத்தில் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இல்லாத ஆயுர்வேத, சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல் போய் விடும். இப்படி பல மருத்துவ குணங்களை கொண்ட அற்புதச் செடியின் பயன்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வழிபாட்டு சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.