ஏன் அமாவாசையன்று மட்டும் தர்ப்பணம் கொடுக்கிறோம்? 

ஏன் அமாவாசையன்று மட்டும் தர்ப்பணம் கொடுக்கிறோம்? 

நம் முன்னோர்களின் பசியையும், தாகத்தையும் தீர்ப்பதற்காகத் தான் அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்கிறோம். விஞ்ஞான ரீதியாக, அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை அதீதமாக வேலை செய்யும் தன்மையுடன் இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

amavasi

அமாவாசையன்று சூரிய கலையும், சந்திர கலையும் சேர்வதால் சுழுமுனை எனும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசை தினத்தன்று மந்திர ஜெபங்களை கற்கவும், செய்யவும் ஆரம்பிக்கின்றனா். அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுவதற்கான காரணமும் இது தான். 

சாதாரணமாக இறந்த போன  ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அவற்றிற்கு உணவு. அமாவாசை தினத்தன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடையவர்களின் வீடுகளுக்கு வரும். 

amavasi

அப்பொழுது நம்மை யாராவது நினைக்கிறார்களா? நமக்குத் தா்ப்பணம், படையல் போன்றவற்றைச் செய்கிறார்களா என்று பார்க்கும். வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். 

annadhanam

அமாவாசையன்று பிதுா் தா்ப்பணம்  மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவிக் கொள்ளக் கூடாது. உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.