ஏன்டா எல்லாரும் அவ்வை சண்முகி ஆகிடமுடியுமா என்ன?

 

ஏன்டா எல்லாரும் அவ்வை சண்முகி ஆகிடமுடியுமா என்ன?

நம்மூரில் கிளைச்சிறைகளிலும், மத்திய சிறைகளிலும் விதிகளைமீறி கைதிகளுக்கு மிஞ்சிப்போன என்னவெல்லாம் கிடைக்கும்? செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட், ஒருவேளை வார்டன் ரொம்ப நெருக்கம்னா சசிகலா மாதிரி வாரத்துக்கு ஒரு தடவை ஷாப்பிங், இவ்வளவுதானே?

நம்மூரில் கிளைச்சிறைகளிலும், மத்திய சிறைகளிலும் விதிகளைமீறி கைதிகளுக்கு மிஞ்சிப்போன என்னவெல்லாம் கிடைக்கும்? செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட், ஒருவேளை வார்டன் ரொம்ப நெருக்கம்னா சசிகலா மாதிரி வாரத்துக்கு ஒரு தடவை ஷாப்பிங், இவ்வளவுதானே? வேறென்ன எதிர்பார்க்க முடியும்? எவ்வளவு வசதிகள் கிடைத்தாலும் சிறை என்றால் சிறைதானே. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி பிரேசில் சிறையில் எண்ணிய கம்பிகளையே எண்ணிய கிளாவினா டா சில்வாவிற்கு சிறையில் இருந்து தப்பிக்கும் யோசனை. காவலர்களை வளைப்பது சுலபமாக இருந்தாலும் வார்டன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாக இருக்கவே, வழக்கமான முறையில் தப்புவது கடினம் என புரிந்துகொண்ட சில்வா கவலையில் இருக்க, சிறையில் அவனை சந்திக்க வருகிறால் அவன் மகள்.
 

Make up items

பார்பி கேர்ள் பொம்மை போல அழகாக இருக்கும் மகளைக்கூட கவனிக்க முடியவில்லையே என்ற கவலை மேலிடும்போது சரேலன ஒரு ஐடியா. மகள் காதில் ரகசியம் சொல்கிறான். மகளும் தலையாட்டுகிறாள். பிறகு சில நாட்கள் கழித்து திரும்பவும் தந்தையை சந்திக்க மகள் வந்துவிட்டு, சிறையிலிருந்து வெளியேறும்போது வார்டன், சில்வாவின் மகளை நிற்கச்சொல்கிறார். அழகான அப்பெண்ணை பார்த்ததும் வார்டனுக்கே சபலம் போல. அவளிடம் பேச்சு கொடுக்கும்போது, வார்டனுக்கு ஏதோ தவறாகப்படுகிறது. பெண்ணை சோதனைச் செய்தால், வார்டனுக்கு ஷாக். அப்பனுக்காக மகள் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கடத்துகிறாளா என்றால், இல்லை, மகள் வேடத்தில் விக், உடை அணிந்துகொண்டு சில்வாவே எஸ்கேப் ஆக முயற்சித்திருக்கிறான். அடப்பாவி, என்னதான் வேஷம் கட்டுனாலும் லேடீஸ் வேஷம்னாலும், அவ்வை சண்முகி மாதிரி எல்லாருக்கும் அம்சமா பொருந்துமா? திரும்பவும் எண்ணிய கம்பிகளையே எண்ணிக்கொண்டிருக்கிறார்ன் சில்வா. கிறுக்கு பயபுள்ள!