”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே?” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி!

 

”ஏதோ நான் வாங்குன பட்டம் எங்கன்னு கேட்டியாமே?” – பதக்கங்களை பட்டியலிடும் மோடி!

தென்கொரியாவின் ‘சியோல் அமைதி விருது’, ரஷ்யாவின் ‘செய்ண்ட் ஆண்ட்ரூஸ் விருது’, ஆப்கானிஸ்தானின் ’காஸி அமீர் அமானுல்லாகான் விருது’, சவுதி அரேபியாவின் ‘அப்துல்லாசிஸ் அல் சவுத் விருது’, பாலஸ்தீனத்தின் ‘கிராண்ட் காலர் விருது’, என அரைடஜன் முஸ்லீம் நாடுகளில் இருந்து விருதுகளை ஏற்கெனவே பெற்றிருக்கிறார் பிரதமர் மோடி. பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறை பயணம் தற்போது மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, இன்று துபாயில் அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘சையது விருது’ வழங்கப்படுகிறது.
 

சக முஸ்லீம் நாடாச்சே, காஷ்மீர் விவகாரத்தில் நமக்கு உதவியாக இருப்பார்கள் என பாகிஸ்தான் இலவு காத்த கிளியாக காத்திருக்க, ‘காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என முந்திக்கொண்டு அறிவித்து விட்டது துபாய். அதுமட்டுமா, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதும் வழங்கி கவுரவிக்கிறது. வெளிநாட்ல எல்லாம் நம்ம தலைக்கு தனி கெத்துதான். பொருளாதார நிலைமையை சீராக்கிட்டா ‘பொருளாதாரத்துக்கான நோபல் பரிசையும் வாங்கிட்டு வந்து ரேக்ல வச்சுடலாம். மனசு வைப்பாரா?