ஏதோ ஒரு காரணத்தால் உருவாக்கிய நிறுவனத்தை விட்டு வெளியேறிய டாப் 8 நிறுவனர்கள்

 

ஏதோ ஒரு காரணத்தால் உருவாக்கிய நிறுவனத்தை விட்டு வெளியேறிய டாப் 8 நிறுவனர்கள்

நிறுவனத்தை தோற்றுவித்து அதனை பெரிய உயரத்துக்கு கொண்டு சென்ற பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிய டாப் 8 நிறுவனர்கள் குறித்து நாம் பார்ப்போம்.

நிறுவனத்தை வெளியேறிய நிறுவனர்களில் முதலில் நாம் பார்க்க இருப்பது ஜாக் மா.  20 ஆண்டுகளுக்கு முன் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவை தொடங்கியவர். தனது கடுமையான முயற்சியால் அலிபாபாவை மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான நிலை நிறுத்தியுள்ளார். ஜாக் மா கடந்த வாரம் தனது 55வது பிறந்தநாளில் அலிபாபா நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவர் விடைபெறும் நிகழ்வு மிகப்பெரிய இசைநிகழ்ச்சி போல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான அலிபாபா ஊழியர்கள் அதில் கலந்து கொண்டனர்.

பில் கேட்ஸ்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைநிறுவனருமான பில்கேட்ஸ் கடந்த 2000ல் தனது 44 வயதில் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ஸ்டீவ் பால்மெருக்கு மாற்றிவிட்டார். அதன்பிறகு 14 வருடங்கள் கழித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் போர்டு தலைவர் பதவியிலிருந்தும் விலகி விட்டார். தற்போது அந்நிறுவனத்தின் ஆலோசகர் என்ற அளவிலேயே உள்ளார். தற்போது தனது மனைவியுடன் இணைந்து அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

மார்க் பிங்கஸ்

பிளாக்பெர்ரி தயாரிப்பு நிறுவனமான ரிசர்ச் மோஷன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மைக் யாரும் எதிர்பாராத வண்ணம் 2013ல் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகினார். மொபைல் சமூக விளையாட்டு நிறுவனமான ஸ்யங்காவின் நிறுவனர் மார்க் பிங்கஸ் 2014ல் நிறுவனத்தின் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கினார். இருப்பினும் ஒராண்டு கழித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வெளியேறியதையடுத்து மார்க் பின்கஸ் மீண்டும் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்தினார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகினார்.

ஜாக் டோர்சே

டிவிட்டர் நிறுவனத்தின் இணைநிறுவனர் ஜாக் டோர்சேவின் நிர்வாக ஸ்டைல்  பிடிக்காமல் பொறுப்பிலிருந்து விலகும்படி அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூறியது. இதனையடுத்து அவரும் விலகினார். ஆனால் 2015ல் மீண்டும் டிவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக ஜாக் பொறுப்பேற்றார். பிரபல கால் டாக்சி நிறுவனமான உபேரின் நிறுவனர் டிராவிஸ் கல்லனிக் தொடர் பிரச்சினைகளால் 2017ல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகினார். 

ஸ்டீவ் ஜாப்ஸ்

2002ல் தொடங்கப்பட்ட மோசில்லா கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் பிரண்டன் எச் 2014ல் தலைமை செயல் அதிகாரி பதவியை துறந்தார். ஒரே பாலின திருமணம் தொடர்பான தனது கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அவர் பதவியை ராஜினாமா செய்தார். 1997ல் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஸ்டீவ் ஜாப்சும் ஒருவர். நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் ஏற்றப்பட்ட மோதலையடுத்து தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து வெளியேறினார். பின் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தை 1997ல் ஆப்பிள் நிறுவனம் வாங்கியது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக மீண்டும் பொறுப்பேற்றார். 2011ல் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல் நலக்குறைவால் காலமானார்.