ஏடிஎம்களை மறந்துபோன மக்கள்! ரிசர்வ் வங்கி தகவல்

ஏடிஎம்களை மறந்துபோன மக்கள்! ரிசர்வ் வங்கி தகவல்

ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்கும் வழக்கம் மக்களிடம் குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம், டெபிட் கார்டை பயன்படுத்தி சில்லறை விற்பனைக் கடைகளில்கூட POS இயந்திரம் வழியாக பணம் செலுத்துவது அதிகரித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 

பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சில்லறை விற்பனைக் கடைகளில் கூட POS இயந்திரம் வழியாக வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மூலம் பணம் ஸ்வைப் செய்வது அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சென்ற ஏப்ரலில் கடைகளில் pos இயந்திரத்தில் வாடிக்கையாளர்கள் ஸ்வைப் செய்தது 34 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.இதுவே, முந்தைய மார்ச் மாதத்தில் pos மூலம் ஸ்வைப் செய்தது 31 புள்ளி 4 சத‌விகிதமாகவும், ஜனவரியில் 3‌0 சதவிகிதமாக இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுப்பது குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, மார்ச் மாதத்தில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுத்தது 70 ‌சதவிகிதமாக இருந்ததாகவும், அடுத்த ஏப்ரலில் அது 66 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாவும் தெரிவித்துள்ளனர்.