ஏஞ்செலினா ஜோலி போல் மேக்கப் ! இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதித்தவர் கைது

 

ஏஞ்செலினா ஜோலி போல் மேக்கப் ! இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதித்தவர் கைது

ஈரானில் ஹாலிவுட் நடிகை போல மாறி தவறான முறையில் பணம் சம்பாதிக்க முயற்சித்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க நடிகையும் இயக்குனரும் ஆ ஏஞ்சலினா ஜோலி அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வென்றிருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி. உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக மேற்கோள் காட்டப்படும் இவர், திரைக்கு வெளியிலும் பரவலாக செய்திகளில் இடம்பிடிக்கிறார்.

angel

இந்நிலையில் ஹாலிவுட் பிரபல நடிகை ஏஞ்செலினா ஜோலி போல மாற வேண்டும் என்பதற்காக முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் ஈரான் நாட்டை சேர்ந்த சகர் தர்பார். இதுமட்டுமின்றி ஏஞ்செலினா ஜோலி போலவே அரிதாரத்தை பூசிக்கொண்டு அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். ஏற்கனவே ஏஞ்செலினா ஜோலி பிரபலம் என்பதால் சகர் தர்பாரின் புகைப்படங்களுடம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் இதுபோன்று செய்வது குற்றம் என்றும், தவறான வழியில் பெயர், புகழ், பணம் போன்றவற்றை சகர் சம்பாதித்துள்ளாகவம் ஈரான் நாட்டை காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அடுத்தவர் முகத்தைப் போல் தன் முகத்தை மாற்றுவது எதிர்கால சந்ததியினரை தவறான பாதைக்கு வழி நடத்தி செல்வதாக இருப்பதாகவம், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்செலினாவை இழிவுபடுத்திவிட்டதாகவும் சகர் தர்பார் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என்ற போதிலும், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த மட்டுமே அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மூரில் அடுத்தவர் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து பதிவிட்டால்தான் குற்றம். ஆனால் அங்கு நம்முடைய முகத்தை கூட அடுத்தவர் முகம் போல் சித்தரிப்பதும் குற்றம்தான்.