ஏங்க இது நிஜம்தானா? இப்படி எல்லாம் நடக்குமா? கட்டிங் பணத்தை திரும்ப கொடுத்த அரசியல்வாதி!

 

ஏங்க இது நிஜம்தானா? இப்படி எல்லாம் நடக்குமா? கட்டிங் பணத்தை திரும்ப கொடுத்த அரசியல்வாதி!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மேங்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் மக்களிடம் கமிஷனாக (கட் மணி) பெற்ற பணத்தை அவர்களிடமே திருப்பி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் ரூ.2.25 லட்சத்தை மக்களிடம் திரும்ப கொடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக கருதப்பட்ட மேங்கு வங்கத்தை மம்தா பானர்ஜி தனது அதிரடி நடவடிக்கையால் வென்றார். தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜிக்கு தற்போது பா.ஜ. பெரும் குடைச்சலை கொடுத்து வருகிறது. 

மம்தா பானர்ஜி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அத்தனை தொகுதிகளையும் வென்று விடுவோம் என்று கெத்தாக இருந்தார் மம்தா பானர்ஜி. ஆனால் தேர்தல் முடிவுகள் அவரை வாயை துறக்க விடாமல் செய்து விட்டன. பா.ஜ. 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. மேலும், மம்தா கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பா.ஜ. பக்கம் தாவினர். மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு குறைந்து வருவதையும், பா.ஜ.வுக்கு கூடி வருவதையும் மம்தா உணர்ந்தார்.

இதை இப்படியே விட்டால் பெரும் சிக்கலாகி விடும் என்பதை உணர்ந்த மம்தா சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தார். பொது மக்களிடம் தனது கட்சிக்காரர்கள் ‘கட் மணி’  வாங்குவது கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுவதை  தெரிந்த மம்தா அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட கட்சிக்காரர்கள் பொதுமக்களிடம் வாங்கிய ‘கட் மணி’யை உடனடியாக திரும்ப கொடுக்க வேண்டும் இல்லை என்றால் காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். அரசின் திட்ட பலன்களை பெற விரும்பும் பொதுமக்களிடம் கட்சிக்காரர்கள் கமிஷனாக பெறும் தொகையைத்தான் ‘கட் மணி’.

லோகோ

இதன் எதிரொலியாக, பிர்பம் மாவட்டம் சத்ரா கிராமத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் டிரைலோசன் முகர்ஜி என்பவர் மக்களிடம் வாங்கிய கட் மணி ரூ.2.25 லட்சத்தை திருப்பி கொடுத்தார். தற்போது இந்த செய்திதான் வைரலாக பரவி வருகிறது. ஆனால் வழக்கம் போல் அது கட் மணி இல்லை என்று திரினாமுல் காங்கிரஸ் சப்பை காரணத்தை கூறியது.