ஏகத்துக்கும் எடப்பாடியை புகழந்து தள்ளும் டாக்டர் ராமதாஸ்!

ஏகத்துக்கும் எடப்பாடியை புகழந்து தள்ளும் டாக்டர் ராமதாஸ்!

டாக்டர் ராமதாஸ் இன்று இரண்டு ட்வீட்களை வெளியிட்டுள்ளார். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் நாகை, கடலூர் மாவட்டங்களில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்து விட்டது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டப்பூர்வமாகி விட்டது  என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது!” என்று கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டப்பூர்வமாகிவிட்டது என்று டாக்டர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இன்று இரண்டு ட்வீட்களை வெளியிட்டுள்ளார். காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் நாகை, கடலூர் மாவட்டங்களில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்து விட்டது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டப்பூர்வமாகி விட்டது  என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது!” என்று கூறியுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் ஆகி விட்டன. அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், சுற்றுச்சுவர் அமைப்பதைத் தவிர வேறு எந்த பணியும் நடைபெறவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருவது எந்த நாளோ?” என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மீதும் அவரது அரசு மீதும் புகார் பட்டியல் வாசித்த டாக்டர் ராமதாஸ், ஆளுநரிடம் ஊழல் புகார் புத்தகத்தையே அளித்த டாக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியை அளவுக்கதிகமாக புகழந்து வருவது சமூக ஊடகங்களில் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.