எஸ் பேங்க் விவகாரம்: ஸ்விக்கி, பிளிப்கார்ட், ஃபோன்பே சேவைகளும் பாதிப்பு

 

எஸ் பேங்க் விவகாரம்: ஸ்விக்கி, பிளிப்கார்ட், ஃபோன்பே சேவைகளும் பாதிப்பு

எஸ் பேங்க் விவகாரத்தால் ஸ்விக்கி, பிளிப்கார்ட், ஃபோன்பே சேவைகளும் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன.

டெல்லி: எஸ் பேங்க் விவகாரத்தால் ஸ்விக்கி, பிளிப்கார்ட், ஃபோன்பே சேவைகளும் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன.

பிரபல தனியார் வங்கியான எஸ் பேங்க் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்தாண்டு சுமார் ரூ.1500 கோடி இழப்பை எஸ் பேங்க் சந்தித்தது. இதையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கியில் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர்.

ttn

இந்நிலையில், எஸ் பேங்க் விவகாரத்தால் ஸ்விக்கி, பிளிப்கார்ட், ஃபோன்பே சேவைகளும் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஏனெனில் எஸ் பேங்க் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களால் இந்த சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சேவைகளில் எஸ் பேங்க் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவது முடக்கப்பட்டு உள்ளது. இதனால் எஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.