எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு

 

எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு

எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி: எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பிரபல தனியார் வங்கியான எஸ் பேங்க் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்தாண்டு சுமார் ரூ.1500 கோடி இழப்பை எஸ் பேங்க் சந்தித்தது. இதையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

yes

இதனால் அந்த வங்கியில் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். இந்த நிலையில், எஸ் பேங்க் வங்கியின் நிறுவனரும் தலைமை நிர்வாகியாக இருந்தவருமான ராணா கபூரின் டெல்லி வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.