எஸ்.ஜே. சூர்யா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

 

எஸ்.ஜே. சூர்யா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

சமூகத்திற்கு பல நல்ல படைப்புகளைத் தந்த எஸ்.ஜே. சூர்யா இந்த முறை திரில்லர் பட பாணியில் இப்படத்தை  இயக்குகிறார். 

நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் புதிய படத்தில் நடிகை சாந்தினி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

மான்ஸ்டர்  படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா  மீண்டும்  பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். இப்படத்தை  எஸ்.ஜே சூர்யாவே   தயாரிக்கிறார்.  சமூகத்திற்கு பல நல்ல படைப்புகளைத் தந்த எஸ்.ஜே. சூர்யா இந்த முறை திரில்லர் பட பாணியில் இப்படத்தை  இயக்குகிறார். 

sjsuriya

இப்படத்துக்கு  யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகை  சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளார்.  

chandhini

சமீபகாலமாகப் படவாய்ப்புகள் இல்லாததால் சாந்தினி டிவி தொடரில் நடிக்க துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2020 ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.