எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளின் காவலை நீட்டிக்க போலீஸ் தரப்பில் மனு!?

 

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு :  குற்றவாளிகளின் காவலை நீட்டிக்க போலீஸ் தரப்பில் மனு!?

இரண்டுபேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட 
வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்கை என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள் என்று வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. அந்த இரண்டுபேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

ttn

அப்போது அவர்களிடம் காவலர் வில்சனை கொலை செய்ததற்கு முக்கிய ஆதாரமான கத்தி மற்றும் துப்பாக்கி குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கேரளாவில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த துப்பாக்கி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் பேருந்து நிலையத்தின் அருகே அதனை வீசிய கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்கின் காவல் தண்டனை இன்றோடு முடிந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். மேலும், கொலைக்கு சம்பந்தமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட உள்ளன. ஆனால், இன்னும் அவர்களிடம் விசாரணை முடிவடையவில்லை. இந்நிலையில் போலீசார் தரப்பில், குற்றவாளிகளை வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவர்களின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.