எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அதிரவைக்கும் வாக்குமூலம் !

 

எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் அதிரவைக்கும் வாக்குமூலம் !

, தாங்கள் இரண்டு பேரும்  தமிழ்நாடு நேஷனல் லீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே அவரை சுட்டுக் கொன்ற நபர்களின் புகைப்படமும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் அப்துல் சமீம், தஃவ்பீக் என்ற இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 

ttn

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காகக் குற்றவாளிகள் இரண்டு பேரும் இன்று அதிகாலை களியக்காவிளை காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இரண்டு பேரிடமும்  தனிப்படை போலீசார், கியூ பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், தாங்கள் இரண்டு பேரும்  தமிழ்நாடு நேஷனல் லீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. 

ttn

அதுமட்டுமில்லாமல் தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரைத் தேசிய புலனாய்வுத் துறை கைது செய்து வருவதால், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் எஸ்.ஐ வில்சனை சுட்டுக் கொன்றதாகவும் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர், அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்  தக்கலை காவல் நிலையம் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.