எஸ்.ஐ வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆள் நடமாட்டமில்லாத புதர் மண்டியில் மீட்பு!

 

எஸ்.ஐ வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஆள் நடமாட்டமில்லாத புதர் மண்டியில் மீட்பு!

நேற்று முன் தினம் நள்ளிரவு குற்றவாளிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்துச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடம், அவர்களின் உறவினர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பணியாற்றி வந்த எஸ்.ஐ வில்சன் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக்கை கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.நேற்று முன் தினம் நள்ளிரவு குற்றவாளிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்துச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடம், அவர்களின் உறவினர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

ttn

வில்சன் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமான துப்பாக்கியைப் பற்றியும் அவர்களிடம் விசாரித்ததில் அந்த  துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீர் கால்வாயில் வீசியதாகக் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, அங்குச் சென்ற போலீசார் அந்த துப்பாக்கியையும் 6 குண்டுகளையும் கைப்பற்றினர். 

ttn

இதனைத் தொடர்ந்து வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி தொடர்பாகவும் அவர்களிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் பேருந்து நிலையத்தின் அருகே அதனை வீசியதாகக் குற்றவாளிகள் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் அவர்களை  இன்று அங்கு அழைத்துச் சென்ற போலீசார் ஆள் நடமாட்டமில்லாத புதர்மண்டி அருகே அந்த கத்தியை மீட்டனர். மேலும், குற்றவாளிகள் கத்தி வாங்கிய இடம், வில்சனை கொலை செய்யத் திட்டமிட்ட இடம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.