எஸ்.ஐ க்கு நிகரான அதிகாரிகளே அபராதம் வசூலிக்க வேண்டும்

 

எஸ்.ஐ க்கு நிகரான அதிகாரிகளே அபராதம் வசூலிக்க வேண்டும்

எஸ் எஸ் ஐ பதவிக்கு கீழ் உள்ள எந்த அதிகாரிகளும் வாகன ஓட்டிகளிடன் அபராதம் செலுத்தி வசூலிக்க கூடாதுl: தமிழக அரசு

எஸ்.ஐ க்கு நிகரான அதிகாரிகளே வாகன ஓட்டிகளிடம்  அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் எந்தெந்த அதிகாரிகள் அபராதம் விதிக்கலாம் என்பது பற்றி அரசு தெரிவித்துள்ளது.  எஸ்.ஐ பதவிக்கு கீழ் உள்ள எந்த அதிகாரிகளும் வாகன ஓட்டிகளிடன் அபராதம் செலுத்தி வசூலிக்க கூடாது என விதிகளை திருத்தி அமைத்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி போக்குவரத்து விதி மீறலின் பொது சிறப்பு காவல் உதவியாளர்கள் பதவிக்கு குறையாத அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம்  அபராதம் விதிக்கலாம் எனவும், சோதனை சாவடிகளில் வாகன ஆய்வாளர் (கிரேட்-2) தகுதிக்கு குறைவாக இருப்பவர்கள் அபராதம் வசூலிப்பதற்கு தடை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.