எஸ்.ஐ கொலை வழக்கு… உடுப்பியிலிருந்து கன்னியாகுமரிக்குக் கொண்டுவரப்பட்ட குற்றவாளிகள்!

எஸ்.ஐ கொலை வழக்கு… உடுப்பியிலிருந்து கன்னியாகுமரிக்குக் கொண்டுவரப்பட்ட குற்றவாளிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்ற இரண்டு பயங்கரவாதிகளும் கன்னியாகுமரி அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்ற இரண்டு பயங்கரவாதிகளும் கன்னியாகுமரி அழைத்துவரப்பட்டுள்ளனர்.

murder

கன்னியாகுமரி – கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். இவர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு த

court

கவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் உடுப்பியில் இவர்கள் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
பிடிபட்ட இருவரையும் கன்னியாகுமரிக்கு அழைத்துவந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களை இன்று காலை குழித்துறை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவரும்.