எஸ்.ஐ கொலை வழக்கில் வாய் திறக்க மறுக்கும் குற்றவாளிகள்… தங்களைக் கொன்றுவிடும்படி கதறல்!

எஸ்.ஐ கொலை வழக்கில் வாய் திறக்க மறுக்கும் குற்றவாளிகள்… தங்களைக் கொன்றுவிடும்படி கதறல்!

குமரி எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதாகவும் தங்களை சுட்டுக்கொல்லும்படி கூறுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
குமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய அப்துல் சமீம் மற்றும் தவ்பிக் ஆகிய இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைதுசெய்யப்பட்டனர். இன்று காலை அவர்கள் களியக்காவிளை கோர்ட்டில் முன்னிறுத்தப்பட்டனர்.

si murder

முன்னதாக, “எங்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக்  கைது செய்ததைக் கண்டித்து டெல்லியில் கைதான தீவிரவாதிகளின் உத்தரவுப்படியும்தான்  சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக் கொன்றோம். எனவே எங்களையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள்” என்று போலீசாரிடம் கூறியதாக செய்திகள் பரவி வருகிறது.
எஸ்.ஐ சுட்டுக்கொல்லப்பட்ட உடன் இஸ்லாமிய பயங்கரவாதிகள்தான் சுட்டுக் கொன்றார்கள் என்று எச்.ராஜா முதல் பல பா.ஜ.க தலைவர்கள் கூறினார்கள். விசாரணைக்கு முன்பு எப்படி இவர்களுக்கு இது தெரிந்தது என்று கேள்வி எழுந்தது. மேலும், கன்னியாகுமரியைச் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதாகக் கூட செய்திகள் வெளியாகின.

pon rashs

இப்போது தலைமை உத்தரவிட்டதால் கொன்றோம் என்று பயங்கரவாதிகள் கூறியதாகவும் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சியதாகவும் செய்தி பரவத் தொடங்கியுள்ளது. சாக வேண்டும் என்று நினைத்திருந்தால் போலீசில் பிடிபடுவதற்கு முன்பாகவே அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம். உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே கொலைக்கான பின்னணி தெரியவரும் என்று கன்னியாகுமரி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.