எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தொடர் மாணவர்கள் தற்கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

 

எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தொடர் மாணவர்கள் தற்கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

இந்திய ஜனநாயக கட்சி தலைவரும்  மக்களவை எம்பியுமான  பச்சமுத்துவுக்கு சொந்தமானது எஸ்ஆர்எம் கல்லூரி.

சென்னை:  எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்களின்  தொடர் தற்கொலை சம்பவத்தையடுத்து இதன் விசாரணை  சிபிசிஐடி -க்கு மாற்றப்பட்டுள்ளது. 

srm

இந்திய ஜனநாயக கட்சி தலைவரும்  மக்களவை எம்பியுமான  பச்சமுத்துவுக்கு சொந்தமானது எஸ்ஆர்எம் கல்லூரி. சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் உள்ள இந்த கல்லூரியில் திருவள்ளூரைச் சேர்ந்த அனுப்பிரியா, கடந்த மே 26ஆம் தேதி கல்லூரியின் 10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அதற்கு அடுத்த நாள் ஜார்கண்டைச் சேர்ந்த அனித் செளத்ரி என்பவர் விடுதியின் பின்புறம் உயிரிழந்து கிடந்தார். கடந்த 15ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

suicide

இப்படி மாணவர்களின் தொடர் தற்கொலை விவகாரம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மாணவர்களின் தொடர் தற்கொலைக்குக் காரணம்  என்ன? கல்லூரியினால் அவர்கள் மனரீதியாக ஏதேனும் பாதிப்புக்கு ஆளாகிறார்களா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. 

cbcid

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மூன்று மாணவர்களின் மரணம் குறித்து விசாரிக்க வழக்கினை  சிபிசிஐடிக்கு மாற்றி, காவல்துறை தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் விரவில் மாணவர்களின் தற்கொலைக்கான காரணம் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.