எஸ்பிபி என்னைக்கூட ஒரு நிகழ்ச்சியில் பாட வைத்தார்- அமைச்சர் ஜெயக்குமார்

 

எஸ்பிபி என்னைக்கூட ஒரு நிகழ்ச்சியில் பாட வைத்தார்- அமைச்சர் ஜெயக்குமார்

50 நாட்களுக்கு மேலாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 55 ஆண்டுகள் திரை இசையில் சுமார் 40 ஆயிரம் பாடல்கள், பல ஆயிரம் மேடைக் கச்சேரிகள் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் எஸ்பிபி. ஒரே நாளில் 19 பாடல்களை பாடிய சாதனை படைத்த இந்த பாடும் நிலா உடலால் மட்டுமே நம்மை விட்டு சென்றுள்ளது.

எஸ்பிபி என்னைக்கூட ஒரு நிகழ்ச்சியில் பாட வைத்தார்- அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பியின் உடலுக்கு அரசு சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் துணை முதலமைச்சர் சார்பில் அஞ்சலி செலுத்தினேன். எஸ்பிபியின் மறைவால் உலக முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களின் வருத்தத்திலும், , அதிர்ச்சியிலும் உள்ளன. பன்முகத் தன்மை கொண்டவர், 16 மொழிகளில் பயணத்தை நடத்தியிருக்கிறார். பழகுவதற்கு குழந்தை போன்றவர். ஊக்கப்படுத்தும் அடிப்படையில் என்னை ஒரு நிகழ்ச்சி பாட வைத்தார். அவர் தூங்கி எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறார். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு இசை ஜாம்பவான். மனிதர்கள் இருக்கும் வரை எஸ்.பி.பி-யின் குரல் இசையாக ஒலித்துக் கொண்டிருக்கும்” என தெரிவித்தார்.