எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ!

 

எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு இருந்தும் ‘கருவானதை’ தவிர்க்க முடியவில்லை – அலீசா மிலானோ!

திடீரென ஒருநாள் தான் கர்ப்பமானது தெரியவந்தபோது, சினிமா கேரியரா, இல்லை வயிற்றில் கருவை கேரி பண்ணுவதா என்ற குழப்பம் வந்ததாக தெரிவிக்கிறார். தான் ஒரு குழந்தைக்கு தாயாகும் பக்குவம் இன்னும் அடைய பெறவில்லை என்பதாலும், அதேநேரம் சினிமா கேரியருக்கு பங்கம் வந்துவிடும் என்பதாலும், நீண்ட யோசனைக்குப் பிறகு கருவை கலைக்கும் கடினமான முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

”நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு விபத்து” என்ற க்ளிஷே வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோவுக்கு சாலப்பொருந்தும். மிலானோவுக்கு ஏழு வயதாக இருக்கும்போது, அவரை கவனித்துக்கொள்ள ஒருவரை நியமித்திருந்தார்கள் அவரது பெற்றோர். அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் ஒரு படப்பிடிப்பு குழுவினர் ‘உங்களில் யார் அடுத்த சுட்டிக்குழந்தை’ என்ற குழந்தை நட்சத்திர தேடலில் இருக்க, இந்த பணிப்பெண் மிலானோவின் பெற்றோருக்கு தெரியாமல் அந்த ஆடிஷனுக்கு இவரை அழைத்துச் சென்றிருக்கிறார். வந்திருந்த 1500 குழந்தைகளில் தேர்வான நான்கு பேரில் அலிசாவும் ஒருவர். அவ்வாறு ஏழு வயதில் ஆரம்பித்த சினிமா வாய்ப்பு, நடிகை, தயாரிப்பாளர், சமூக செயற்பாட்டாளர் என பல உயரங்களைத் தொட அலிசாவுக்கு வாய்ப்பாக அமைந்தது. சமீபத்தில் தன்னுடைய பால்ய கால சேட்டைகள் குறித்து ஒரு பேட்டியில் விலாவாரியாக சொல்லியிருந்தார் மிலானோ.

Alysa Milano

அதாவது, 1993 வாக்கில், அதாவது டீன் ஏஜ் முடிந்த சில வருடங்களில் தன்னுடைய காதலருடன் வாழ்க்கை இனிமையாக சென்றதாகவும், திடீரென ஒருநாள் தான் கர்ப்பமானது தெரியவந்தபோது, சினிமா கேரியரா, இல்லை வயிற்றில் கருவை கேரி பண்ணுவதா என்ற குழப்பம் வந்ததாக தெரிவிக்கிறார். தான் ஒரு குழந்தைக்கு தாயாகும் பக்குவம் இன்னும் அடைய பெறவில்லை என்பதாலும், அதேநேரம் சினிமா கேரியருக்கு பங்கம் வந்துவிடும் என்பதாலும், நீண்ட யோசனைக்குப் பிறகு கருவை கலைக்கும் கடினமான முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். கருவை கலைத்தது முழுக்கமுழுக்க தன்னுடைய முடிவுதான் என்றாலும், இன்னும் கூடுதல் முன்னெச்சரிக்கையோடு இருந்திருக்கலாம் என்று வருந்தியாகவும் சொல்லியிருக்கிறார். இதுவரைக்கும் செய்தி ஒண்ணுமே இல்லேன்னுதானே நினைக்கிறீங்க, இப்பப் பாருங்க ட்விஸ்ட்டை. இந்தக் கவலையிலேயே இருந்தவருக்கு இன்னொரு அதிர்ச்சி அடுத்த சில மாதங்களில் கிடைத்திருக்கிறது, அதாவது திரும்பவும் கருவுறுகிறார். திரும்பவும் கவலையுறுகிறார். திரும்பவும் கலைக்கிறார்.