எவ்வளவு பட்டாலும் திருந்தாத டிடிவி தினகரன்! சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதே இலக்கு என முழக்கம்!!

 

எவ்வளவு பட்டாலும் திருந்தாத டிடிவி தினகரன்! சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதே இலக்கு என முழக்கம்!!

தேர்தல் தோல்வி என்பது நல்ல அனுபவம் என்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதே இலக்கு என்றும் அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தேர்தல் தோல்வி என்பது நல்ல அனுபவம் என்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதே இலக்கு என்றும் அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் தங்கள் தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன. ஆளும் கட்சியான அதிமுக எப்படியாவது இந்த இரண்டு தொகுதிகளையும் வெற்றிகொண்டு மேலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை கூட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. இந்த இரண்டு தரப்புகளுக்குமே குறிப்பிடும்படியான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் டிடிவி தினகரன் பொதுச்செயலாளராக உள்ள அமமுகவும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை, கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக 5.27 சதவீத வாக்குகளையும் மநீம 3.72 சதவீத வாக்குகளையும் பெற்றன. இந்த இரு கட்சிகளால் வாக்குகளை உடைக்க முடிந்ததே தவிர வெற்றியை ருசிக்கமுடியவில்லை. 

TTV

இந்நிலையில் கோவை மாவட்டம் கணியூர் பகுதியில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதே இலக்கு. தேர்தல் தோல்வி என்பது நல்ல அனுபவம். தேர்தல் தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோற்றதற்காக அமமுக அழிந்து விடும் என நினைப்பது மற்றவர்களின் பகல் கனவு. சுயநலத்தினால் சிலர் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் மக்கள் அமமுகவினருக்கு ஆதரவாக உள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள்

அமமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தொண்டர்களுக்கும், கடவுளுக்கும் மட்டுமே பயப்படுவேன். வேறு யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை அரசியலில் அறிமுகப்படுத்தியது ஜெயலலிதா.  சிலர் கட்சியில் இருந்து வெளியேறியதால், கட்சி பலவீனம் அடைந்து விடவில்லை.