எவிக்‌ஷன் மோட்! அடுத்தடுத்து வெளியேற போவது யார்? அதிரடி காட்டும் கமல்!!

 

எவிக்‌ஷன் மோட்! அடுத்தடுத்து வெளியேற போவது யார்? அதிரடி காட்டும் கமல்!!

கடந்த சில வாரமாக சுவாரஸ்யமில்லாமல் சென்றுகொண்டிருந்த பிக்பாஸில், சென்ற வாரம் நடந்த பிரீஸ் டாஸ்க் உணர்ச்சிகலந்த சுவாரஸ்யத்தை அளித்தது.

கடந்த சில வாரமாக சுவாரஸ்யமில்லாமல் சென்றுகொண்டிருந்த பிக்பாஸில், சென்ற வாரம் நடந்த பிரீஸ் டாஸ்க் உணர்ச்சிகலந்த சுவாரஸ்யத்தை அளித்தது. நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் பெற்றோர்கள், நண்பர்கள் வந்து பிக்பாஸ் வீட்டை குதூகலப்படுத்தினர். குறிப்பாக லாலா வருகை, லாஸ்லியாவின் அப்பா வருகை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆக போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் முடிவில் கவின், வனிதா, ஷெரின்,சாண்டி, தர்ஷன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கடந்த வார நாமிஷேனஷில் வனிதாவுக்கு தான் மிக குறைவான வாக்குகள் கிடைத்தன இதனால் அவர் இந்த வாரத்துடன் சென்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

vanitha

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் ஐந்து பேரில் அடுத்தடுத்து வெளியே போகக்கூடியவர்கள் யாராக இருக்கும் என கேள்வி கேட்கிறார். இதில் 90 சதவீதம் வனிதா தான் முதலிடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.