எவர்க்ரீன் பிரபஞ்ச அழகி சுஷ்மிதாவுக்கு டும் டும் டும்..?

 

எவர்க்ரீன் பிரபஞ்ச அழகி சுஷ்மிதாவுக்கு டும் டும் டும்..?

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் மற்றும் மாடல் ரோமன் ஷா திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மும்பை: பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் மற்றும் மாடல் ரோமன் ஷா திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்தியா சார்பில் முதன் முதலாக ‘பிரபஞ்ச அழகி’ பட்டத்தை வென்ற பெருமைக்குரிய சுஷ்மிதா சென், தமிழில் நாகார்ஜுனாவுடன் ‘ரட்சகன்’ திரைப்படத்தில் நாயகியாகவும், ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். சில பாலிவுட், விளையாட்டு வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட சுஷ்மிதா, நட்சத்திர ஹோட்டல் உரிமையாளரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

sushmitasen

தற்போது 43 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென் திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ரெனீ சென், அலிஸா சென் ஆகிய இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா, டெல்லியைச் சேர்ந்த மாடல் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவின.

sushmitasen

கிசுகிசுக்களை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தாஜ் மஹாலுக்கு காதலருடன் சென்ற புகைப்படத்தை பகிர்ந்த சுஷ்மிதா, தொடர்ந்து தனது மகள்கள் மற்றும் காதலருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்தார்.

sushmitasen

ரோமன் ஷா(27) நடிகை சுஷ்மிதா சென்னுடன் 16 வயது குறைந்தவர். 16 வயது வித்தியாசம் இருந்தும் இருவரும் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது வளர்ப்பு மகள்களின் சம்மதத்துடன், பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் பாணியில் தற்போது சுஷ்மிதா சென் – ரோமன் ஷால் ஜோடியும் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தெரிகிறது.