எழுவர் விடுதலையில் முதல்வர் மௌனம் சாதித்து வருகிறார்: இரா முத்தரசன் தாக்கு..!

 

எழுவர் விடுதலையில் முதல்வர் மௌனம் சாதித்து வருகிறார்: இரா முத்தரசன் தாக்கு..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் மத்தியச் சிறையில் சுமார் 27 வருடங்களாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் மத்தியச் சிறையில் சுமார் 27 வருடங்களாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல பேர் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், முதல்வர் எடப்பாடி இதுவரை அவர்கள் விடுதலை குறித்து எந்த செய்தியையும் வெளியிடவில்லை. இது குறித்து திருச்சியில் நடைபெற்ற அரசியல்  பயிலரங்க நிறைவு விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவரின் விடுதலைக்கு அவரது குடும்பத்தினரே எதிர்ப்பு தெரிவிக்க வில்லை, இதில் சீமானின் கருத்துகள் தேவையற்றவை என்று கூறியுள்ளார். 

Edapadi

அதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு குறித்த பிரச்சனையிலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முதல்வர் இது வரை ஏதும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார் என்று எடப்பாடியை விமர்சித்துள்ளார். மேலும், பயிர்க் காப்பீட்டின் இழப்பீடு தொகைகள் விவசாயிகளின் கடன் கணக்கில் வருவதால், அக்டோபர் 23-ம் தேதி தஞ்சை உள்ளிட்ட மூன்று பகுதிகளில்   விவசாயச் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.