எழுவரின் விடுதலை நாங்கள் போட்ட பிச்சை : செல்லூர் ராஜுக்கு அற்புதம்மாள் பதிலடி!

 

எழுவரின் விடுதலை நாங்கள் போட்ட பிச்சை : செல்லூர் ராஜுக்கு அற்புதம்மாள் பதிலடி!

எழுவர் விடுதலைக்காகத் தமிழக அரசுதான் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். நான் பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது என அற்புதம்மாள் தெரிவித்தார்.

திருவாரூர்: எழுவர் விடுதலைக்காகத் தமிழக அரசுதான் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். நான் பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது என அற்புதம்மாள் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எழுவர் விடுதலைக்கான மக்கள் சந்திப்பு இயக்கத்தின் ஊர்வலத்தில் கலந்து கொண்ட அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘எழுவர் விடுதலையை தமிழக அரசுதான் பெற்றுத்தரவேண்டும். நான் பா.ஜ.கவை அணுகவேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. நீதிமன்றத் தீர்ப்பையே ஏன் ஆளுநர் மதிக்கவில்லை என்று தான் இந்த மக்கள் சந்திப்பு கலந்துரையாடல். இதில் அ.தி.மு.க மெத்தனமாக இருக்கிறதா? சுறுசுறுப்பாக இருக்கிறதா? என்பது எனக்கு தேவையில்லாத பிரச்சனை.

sellurraju

உங்கள் மகனை உங்களிடம் ஒப்படைப்பேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்து உள்ளார்கள்.இது அனைவருக்கும் தெரியும். அதை புரிந்தவர்கள், இப்பொழுது அரசியலில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றி தான் ஆகவேண்டும். செல்லூர் ராஜு கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த எழுவரின் விடுதலை நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியதற்கு முதலில் நானே சற்று ஆத்திரப்பட்டேன். ஆனால் அவரோ  மக்களாகிய நாம் போட்ட வாக்கு பிச்சையை கொண்டு தான் அமைச்சரவையில் உள்ளார். அதனால் தான் அவர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஏழு பேர் விடுதலைக்கு தீர்மானம் போட்டு கையெழுத்திட்டு ஆளுநரிடம் கொடுத்தார்கள்’என்றார்.