எழுதவே கூசுது – நாயைக்கூட விட்டுவைக்காத காமுகன்!

 

எழுதவே கூசுது – நாயைக்கூட விட்டுவைக்காத காமுகன்!

ஆகஸ்ட் 15ஆம் தேதி எல்லாரும் சுதந்திர தின விடுமுறையை கொண்டாடிமுடிக்கும் இரவு வேளையில், மும்பை கர்கார் பகுதியில் இருக்கும் ஓட்டலுக்கு முன்புதான் அந்த கொடூரம் நடந்திருக்கிறது. அந்த உணவகத்தில் வேலை செய்யும் 20 வயதான கோவர்தன் குமார் ராம் எனும் இளைஞன், உணவக வாசலே கதியென கிடக்கும் நாய்க்கு அடிக்கடி சாப்பாடு கொடுத்து வந்திருக்கிறான். நன்றி உள்ள பிராணியாயிற்றா, எனவே கோவர்தனை பார்க்கும்போதெல்லாம் வாலாட்டி அன்பை வெளிப்படுத்தியிருக்கிறது அந்த நாய். அந்த நாயிடம் இந்த நாய் காட்டியதெல்லாம் அன்பு அல்ல வம்பு என்பதே அதன்பிறகுதான் உணர்ந்திருக்கிறது நிஜ நாய்.

இரவு நேரம் யாரும் இல்லாததால், அந்த நாயுடன் இயற்கைக்கு மீறிய வகையில் நடந்துகொண்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றிவிட்டனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டனர். வீடியோவைக் கண்டு வெகுண்டெழுந்த மிருகநல ஆர்வலர்கள், உடனடியாக மும்பை கமிஷனர் வரைக்கும் இந்த விஷயத்தைக் கொண்டுசென்று நடவடிக்கைக் கோரவே, கோவர்தன் கைது செய்யப்பட்டான்.