எழுச்சி கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்தது

 

எழுச்சி கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்தது.

ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டியை குறைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சில நிறுவன பங்குகளின் விலை குறைவாக இருந்ததால் முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கி குவித்தனர். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ், சன்பார்மா, யெஸ் பேங்க், டெக் மகிந்திரா, இன்போசிஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. எல் அண்டு டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா மோட்டார்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,241 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,223 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 209 நிறுவனங்களின் பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.10 லட்சம் கோடியாக உயர்ந்தது.

எல் அண்டு டி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 174.84 புள்ளிகள் உயர்ந்து 40,850.29 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 49 புள்ளிகள் ஏற்றம் கண்டு 12,043.20 புள்ளிகளில் முடிவுற்றது.