எல்.ஜி ரசாயன ஆலையில் திடீரென வாயுக்கசிவு.. 3 பேர் பலி: 3 கி.மீ தூரத்திற்கு வாயு பரவியுள்ளதால் பீதியில் மக்கள்!

 

எல்.ஜி ரசாயன ஆலையில் திடீரென வாயுக்கசிவு.. 3 பேர் பலி: 3 கி.மீ தூரத்திற்கு வாயு பரவியுள்ளதால் பீதியில் மக்கள்!

எல்.ஜி.பாலிமர்ஸ் இண்டஸ்ட்ரி என்னும் ரசாயன ஆலையில் இன்று காலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர் வெங்கடாபுரத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் இண்டஸ்ட்ரி என்னும் ரசாயன ஆலையில் இன்று காலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. அதில், அப்பகுதியில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆலையை சுற்றி இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆலையை சுற்றி கிட்டத்தட்ட 3 கி.மீ தூரத்துக்கு விஷவாயு பரவியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் இருக்கின்றனர். 

 

ttn

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வினய் அங்கு இருக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தினார். இது குறித்து பேசிய அவர், இந்த நிலைமை இன்னும் 2 மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் வாய்க்கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.