எல்.ஐ.சி திறக்கப்படாதது ஏன், வங்கியில் நகைக்கடன் வழங்காதது ஏன்? மத்திய அரசிடம் ப. சிதம்பரம் கேட்ட நச்சினு 5 கேள்வி! 

 

எல்.ஐ.சி திறக்கப்படாதது ஏன், வங்கியில் நகைக்கடன் வழங்காதது ஏன்? மத்திய அரசிடம் ப. சிதம்பரம் கேட்ட நச்சினு 5 கேள்வி! 

கொரோனா பரவ தொடங்கிய நிலையிலேயே இந்தியா முழுக்க ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறிவந்தனர். குறிப்பாக ப.சிதம்பரம் தினமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடிதம், ட்வீட், பேட்டி அளித்துவந்தார். ஆனால் இந்த கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், ஏழைகள், நடுத்தர வருவாய் மக்களுக்கு உணவு மற்றும் பொருளாதார உதவிகள் அறிவிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்திவந்தார். ஆனால் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பு வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. மத்திய அரசு நிதி உதவியை அறிவித்துவிட்டு இன்னும் பலருக்கும் அளிக்காமல் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு நிறைவடையும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஊரடங்கு நீட்டிக்கப்படுவது பற்றி அரசுகள் பேசி வருகின்றன. 

 

 

இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “மாநிலங்களிலிருந்து கிடைத்த முக்கிய செய்திகள்

1. மத்திய அரசு மாநிலங்களுக்கு இதுவரை தந்தது டிசம்பர்-ஜனவரி மாதங்களின் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை; மாநில பேரிடர் நிதியிலிருந்து முதல் தவணை; மற்றும் ரூ 15,000 கோடி சுகாதார கட்டுமான நிதியிலிருந்து ஒரு பங்கு.

2. விரைவு பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்வதில் தடங்கல், தாமதம்

3. எல்ஐசி (LIC) கிளை அலுவலகங்கள் திறக்கப்படவில்லை, ஏன் என்று தெரியவில்லை

4. வங்கிகளில் தங்க நகைக் கடன்களை தர மறுக்கிறார்கள். நடுத்தர வர்க்க மக்கள் பணத்திற்கு என்ன செய்வார்கள்?” என பதிவிட்டுள்ளார்.