எல்லோரும் ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ப.சிதம்பரம்

 

எல்லோரும் ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ப.சிதம்பரம்

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். எல்லோரும் ஏழை என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு குறித்து ப.சிதம்பரம் கூறியுள்ளார்

சென்னை: ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். எல்லோரும் ஏழை என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது என பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு குறித்து ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பொருளாதார அடிப்படையில் உயர் சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் கடந்த 8-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இட ஒதுக்கீடு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில், மாதம் ரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழை, மாதம் 6000 வருமானமுள்ளவரும் ஏழை. இது எப்படி இருக்கு எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.