எல்லைகளை மூடுங்க…. முடக்கத்தை மீறிய மற்றும் வீட்டுக்கு சென்றவர்களை 14 நாள் தனிமைப்படுத்துங்க… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..

 

எல்லைகளை மூடுங்க…. முடக்கத்தை மீறிய மற்றும் வீட்டுக்கு சென்றவர்களை 14 நாள் தனிமைப்படுத்துங்க… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..

மாநில எல்லைகளை மூடுங்க. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க வையுங்க. முடக்கத்தை மீறியவர்கள் மற்றும் வீடுகளுக்கு சென்றவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துங்க என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், கடந்த புதன்கிழமை முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை நிறுவனங்களை தவிர்த்து அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் பெரும் நகரங்களில் வேலை பார்த்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்தனர்.

சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

வேலையும் இல்லை, உணவும் கிடைக்காததால் பெரும் நகரங்களுக்கு இடம் பெயர்ந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர். பஸ்முனையங்கள் மற்றும் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இது மத்திய அரசு வலியுறுத்தி வரும் சமூக விலகலுக்கு எதிரானது. மேலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்தது.

சொந்த ஊருக்கு செல்ல தயாராக இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
 
இதனையடுத்து முடக்கத்தை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு  மத்திய அரசு  ஆலோசனைகளை வழங்கியது. இது உடனே மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவால் ஆதரிக்கப்பட்டது. வெளிமாநிலங்களிலிருந்து உள்ளே வரும் பேருந்துக்களை மாநில எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பதை ஊக்குவிக்க வேண்டும். மேலும் முடக்கத்தை மீறியவர்கள்  மற்றும் வீடுகளுக்கு சென்றவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துங்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோரை வீடு காலி செய்யும்படி வலியுறுத்தும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுங்க என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முடக்க தினங்களுக்கு தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.