எல்லாரையும் விட எனக்குதான் பிரச்னைகள் அதிகம் என தோன்றுவதில் இருந்து எப்படி மீள்வது?

 

எல்லாரையும் விட எனக்குதான் பிரச்னைகள் அதிகம் என தோன்றுவதில் இருந்து எப்படி மீள்வது?

உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும் உளவியல் பிரச்னையை தீர்ப்பதற்காக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் ‘ஒரு தீர்வு சொல்லட்டா #Friends’ என்ற வாசகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உளவியலாளர் குமரன் குமணன் வாரா வாரம் வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

அந்த வகையில் நேயர் கேட்ட இந்த வார கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் பின்வருமாறு:

கேள்வி: அனைவருக்கும் பிரச்னைகள் உள்ளது. ஆனால், எனக்கு மட்டும் தான் அனைவரையும் விட அதிக பிரச்னைகள் உள்ளது போன்று தோன்றுகிறது? 

பதில்: நியாயமான ஒரு சந்தேகம் .நல்ல ஒரு கேள்வியா மாறி வந்திருக்கு .மகிழ்ச்சி . எல்லாரும் சொல்ற விஷயம் தான் .”இக்கரைக்கு அக்கரை பச்சை”ன்னு சொல்லுவாங்களே.அதுதான் .

உலகத்துல சில விஷயம்லாம் மாறவே மாறாது .”காதல் ” எப்படி ரொம்ப பழைய விஷயமா இருந்தும் ,இப்போ வரைக்கும் அதே ஆழத்தோட இருக்கோ அதே போல தான் இந்த உணர்வும். நீங்க சொல்றத வெறும் வார்த்தைகளா மட்டும் மத்தவங்ககிட்ட சொன்னா ,அவங்க வாழ்க்கை பிரச்னையை சொல்ல ஆரம்பிச்சு உங்களையும் குழப்ப ஆரம்பிச்சுடுவாங்க . இங்கதான் படிக்கிற பழக்கமும் இசையை கேட்கிற பழக்கமும் கை கொடுக்கும் .

வாசிப்புன்னு சொன்ன உடனே பெரிய தலைவர்கள் ,மேதைகளோட வாழ்க்கையை படிக்க சொல்வானோன்னு பயப்பட வேணாம்..இப்ப எல்லாம் நம்மளை சுத்தி இருக்குற மக்களுக்குள்ளேயே பல பேர் பல விஷயங்கள் மூலமா பெரிய நம்பிக்கைய கொடுக்குறாங்க .அப்படிப்பட்டவங்கள படிச்சோ , இல்ல டி.வி மூலமாகவோ தெரிஞ்சுக்கும்போது நமக்கு இருக்குற பிரச்னைகள் எல்லாம் ஒன்னுமே இல்லன்னு ஆகிடும்.

orutheervu

அப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டதால மட்டும்தான் என் பிரச்னைகளை தாண்டி உங்களுக்கு பதில் சொல்ல முடியுது ..என்னைப்போல இருந்தும் என்னைவிட அதிகமா சாதிச்ச மாற்றுத்திறனாளிகள் பல பேருக்கு நல்ல  நண்பனா கூட பிறக்காத  சகோதரனா இருந்து, அவங்களுக்கு என்னால முடிஞ்ச சந்தோஷத்தை கொடுத்து சந்தோஷப்பட முடியுது .

நீங்களும் இப்படி ஏதாவது முயற்சி பண்ணி பாருங்க .நிச்சயமா இப்போ இருக்கிற உங்க எண்ணம் ,கொஞ்சமாவது குறையும் ..அப்படி ஒரு வேளை எதுவும் மாறலைன்னு தோனிச்சுன்னா ..நேர்ல வாங்க ,சந்திச்சு பேசுவோம் ..நான் இப்போ மேல சொன்னது அத்தனைக்கும் உதாரணமாக நானே உங்க முன்னாடி நிப்பேன்.இல்லை இல்லை .உட்கார்ந்திருப்பேன்.

வாழ்த்துகள். வெல்வோம் .