எல்லாரும் கை தட்டுங்க; பிரசாரத்தின் போது மக்களுக்கு ஆர்டர் போட்ட தம்பிதுரை

 

எல்லாரும் கை தட்டுங்க; பிரசாரத்தின் போது மக்களுக்கு ஆர்டர் போட்ட தம்பிதுரை

மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கள் வேட்பாளர்களை அழைத்து சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் முனைப்பு காட்டி வருகிறது. கரூர் எம்.பி. தம்பிதுரையும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். கரூரில் அதிமுகவின் எதிரணியான திமுக நிற்கவில்லை, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜோதிமணியின் தேர்தல் பிரச்சாரமும் ஒருபுறம் சூடுபிடித்துள்ளது.

தம்பி

பிரசாரத்தின் போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தம்பிதுரை தனது அரசியல் பணி குறித்து பேசினார். அப்போது அவர், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாத்தி கொடுத்திருக்கிறோம், இதையெல்லாம் செஞ்சது யாரு?, நான்தானே சொல்லுங்கம்மா என்றார் சுற்றியிருக்கும் மக்களை பார்த்து. அதற்கு மக்கள் அமைதியாக ஆமாம் என, கை தட்டுங்க எல்லாரும் அத செஞ்சு கொடுத்ததுக்கு என்றார்.

தம்பிதுரை

கைதட்டலை கூட கேட்டு வாங்குகிறார் தம்பிதுரை என இதனை சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.