‘எல்லாம் போலி நகை’.. 2 வருஷமா ரூ.2 கோடி பணம் அப்பேஸ் : கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த கொள்ளை!

 

‘எல்லாம் போலி நகை’.. 2 வருஷமா ரூ.2 கோடி பணம் அப்பேஸ் : கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த கொள்ளை!

அங்கு ரூ.2 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு நகைக்குப் பதிலாக மக்களுக்குக் கடன் வழங்கப்படும். மக்கள் தங்க நகைகளைக் கொடுத்து பணம் பெரும் போது, அதனை ஒன்றுக்கு நான்கு முறை சோதித்துப் பார்த்தே நகைகளை வாங்குவர். ஆனால், அங்கு ரூ.2 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 10 நாட்களாகக் கூட்டுறவு கடன் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அந்த சோதனையில் போலி நகைகளைக் கொடுத்து ரூ.2 கோடி வரை மோசடி நடந்துள்ளது அம்பலமாகியது. இதில், கூட்டுறவுச் சங்கத்தில் வேலை செய்பவர்களே ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தான் மாட்டிக் கொண்டதை அறிந்த  நகை மதிப்பீட்டாளர் பாலையா விசாரணைக்கு முன்பாக தப்பி ஓடினார். இதனால், இந்த மோசடியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளது உறுதியானது.

tth

இந்த மோசடி காரணமாகக் கடந்த சில நாட்களாக அலுவலகம் இயங்கவில்லை. இதுமட்டுமல்லாமல், 2 கோடி மோசடியில் அரசியல் பிரமுகர்களும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நகையைக் கணக்குக் காட்ட முடியாமல் கூட்டுறவு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.