‘எல்லாம் புகழும் தோனிக்கே’ : திக்.. திக்.. நிமிடத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி!

 

‘எல்லாம் புகழும் தோனிக்கே’ : திக்.. திக்.. நிமிடத்தில்  சென்னை அணி  த்ரில் வெற்றி!

சென்னை அணி ராஜஸ்தான் அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது

ஜெய்ப்பூர்: சென்னை அணி ராஜஸ்தான் அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  12 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது

டாஸ் வென்ற சென்னை அணி

rr

 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஜெய்ப்பூரில் நேற்று  நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 151 ரன்கள் எடுத்தது. 

தொடக்கம் முதலே அதிர்ச்சி 

rr

 

இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்கம் முதலே வாட்சன் 0, டு பிளசிஸ் 7, ரெய்னா 4, ஜாதவ் 1 என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியைத் தந்தனர். 
ஆனால் அம்பதி ராயுடு – தோனி இருவரும் நிதானமாக ஆடி சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

சூடுபிடிக்க துவங்கிய ஆட்டம்

csk

 

ராஜஸ்தான் பந்துவீச்சை திணறடித்த அம்பதி ராயுடு 47 பந்துகளில் 57 ரன்கள்  எடுத்து ஆட்டமிழக்கக்  கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 ரன்கள் சென்னை அணிக்குத் தேவைப்பட்டது.  ஜடேஜா சிக்ஸ் அடித்து கீழே விழ ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. இரண்டாவது பந்து நோபால் வீச அதில் ஒரு ரன் சேர்த்தனர். அடுத்தப் பந்தை எதிர்கொண்ட தோனி, இரண்டு ரன்கள் எடுத்தார்.

சென்னை அணி த்ரில் வெற்றி

 

கடைசி ஓவரின் மூன்றாவது   தோனி ஆட்டமிழக்கச் சென்னை ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். கடைசி மூன்று பந்துகளுக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது. தோனியை  தொடர்ந்து மிச்செல் சன்டெர் களமிறங்கினார். கடைசி ஒரு பந்தில்  3 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான நேரத்தில் கடைசிப் பந்தில் மிச்செல் சன்டெர்   சிக்ஸர் அடிக்க சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. அதன்படி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த வகையில்  100 ஐபிஎல் போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றதோடு ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். 
 

இதையும் வாசிக்க: வழக்கம்போல் வம்பிழுத்த கஸ்தூரி: மூக்கை உடைத்த பிரபல இயக்குநர்!?