எல்லாத்தையும் மேல (டெல்லியில‌) இருக்கிறவர் பார்த்துக்குவார் – பாயப் பதுங்கும் பன்னீர்

 

எல்லாத்தையும் மேல (டெல்லியில‌) இருக்கிறவர் பார்த்துக்குவார் – பாயப் பதுங்கும் பன்னீர்

இழந்தப்பெருமையை மீட்கவேண்டிய டூ-ஆர்-டை நிலைமை பன்னீருக்கு. ஒன்று கட்சியில் தலைமை வேண்டும், இல்லையென்றால் கட்சியை உடைத்து, ஆட்சி போனாலும் பரவாயில்லை,  பாஜகவில் இணைந்து மகனுக்கு மந்திரிபதவி வாங்கிக்கொள்ளலாம், எல்லாவற்றையும் மேல‌ (டெல்லி) இருக்கிறவர் பார்த்துக்கொள்வார் என்பது பன்னீர் நம்பிக்கை.

கட்சியும் ஆட்சியும் இருவேறு தலைமைகளால் நிர்வகிக்கப்படுவது பலன் தரவில்லை, ஒற்றைத் தலைமைதான் அதிமுகவுக்கு வேண்டும் என ராஜன் செல்லப்பா சொல்ல ஆரம்பித்ததும், சாவி கொடுத்த பொம்மைபோல தொடர்ச்சியாக ஆதரவு/எதிர்ப்புக் குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. பன்னீர்செல்வம் சொல்லித்தான் செல்லப்பா அப்படி பேசியதாகவும், இல்லையில்லை பன்னீரை ஓரங்கட்ட எடப்பாடியின் ஏவுதலின்பேரில்தான் செல்லப்பா அப்படி பேசியதாகவும், உங்க ரெண்டு பேருக்குமே அரசியலே தெரியலை, வைத்திலிங்கம் சொல்லித்தான் செல்லப்பா இப்படி பேசியதாகவும், குருமூர்த்தி சொல்லித்தான் இவர்கள் அனைவரும் இப்படி பேசியதாகவும் செய்திகள் சிறகடிக்கின்றன. கட்சிக்கு வலுவான ஒற்றைத் தலைமையாக‌ அமித் ஷா இருக்கும்போது, புதிய தலைமை எதற்கு என எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்வதும் ஒருபக்கம்.

Rajan Chellappa

குருமூர்த்தி சொல்லி தர்மயுத்தம் தொடங்கியதுமுதல் எல்லாமே இறங்குமுகம்தான் பன்னீருக்கு. ஆட்சியிலும் முழு அதிகாரம் செலுத்த முடியவில்லை, கட்சியும் கன்ட்ரோலில் இல்லை, அவ்வளவு ஏன்? மகனுக்கு மந்திரிபதவிகூட கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. எனவே, இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும் என்ற வேகத்தில் தேனியார். அதேநேரம் பன்னீரின் புத்திர பாசம் மற்றும் அவசரத்தை தனக்கு சாதகமாக்க பார்க்கிறார் எடப்பாடியார். ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி இறுதி முடிவெடுக்க ஆலோசனை கூட்டம் என்ற பெயரில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். கூட்டத்திற்கு எல்லா எம்.எல்.ஏக்களும் வருவார்களா என்பதில் ஆரம்பித்து நிறைய ஆசிட் சோதனைகள் காத்திருக்கிறது.

OPS EPS

இழந்தப்பெருமையை மீட்கவேண்டிய டூ-ஆர்-டை நிலைமை பன்னீருக்கு. ஒன்று கட்சியில் தலைமை வேண்டும், இல்லையென்றால் கட்சியை உடைத்து, ஆட்சி போனாலும் பரவாயில்லை,  பாஜகவில் இணைந்து மகனுக்கு மந்திரிபதவி வாங்கிக்கொள்ளலாம், எல்லாவற்றையும் மேல‌ (டெல்லி) இருக்கிறவர் பார்த்துக்கொள்வார் என்பது பன்னீர் நம்பிக்கை.

Amith Shah

மன்னார்குடி வகையறாவிடம் இருந்தும், பன்னீர்டமிருந்தும் லாவகமாக ஆட்சியை மீட்டெடுத்தது தன் சாதுர்யம் என இன்னமும் நம்பும் எடப்பாடி, ஆட்சியையும் கட்சியையும் முழுமையாகப் பெற, சட்டையில் அமித் ஷா போட்டோவையே வைப்பதற்கும் தயாராகத்தான் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடியும் பன்னீரும் தத்தமது சேனைகளை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள். இருவரில் யார்பக்கம் போவது என்ற குழப்பத்தில் சில நிர்வாகிகள்/அமைச்சர்கள். வருகிற 12ஆம் தேதி ஒரு மினி தேர்தல் ரிசல்ட் நாள் போல இருக்கும் என்றால் ஆச்சர்யம் இல்லை.